×

ஏபிஎல் ரேசன் கார்டு வழங்க என்ன பிரச்னை? மாஜி அமைச்சர் யுடி காதர் கேள்வி

பேரவையில் மாஜி அமைச்சர் யுடி காதர் பட்ஜெட் மீது பேசியதாவது: மாநிலத்தில் புதிய ரேசன் கார்டுகள் வழங்குவதை அமைச்சர் நிறுத்த வில்லை என்று கூறுகிறார். அதே நேரம் மாநிலம் முழுவதும் 1.50 லட்சம் விண்ணப்பம் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் நிலுவையில் இருக்கிறது. முதல்வரின் சொந்த மாவட்டமான ஷிவமொக்காவில் 3290 பேர், குடகு மாவட்டத்தில் 1100 பேர் இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. புதிய ரேசன் கார்டு வழங்கப்படவில்லை என்று கூறுகிற அதிகாரிகள் அரசாணையை காரணம் காண்பிக்கின்றனர். எங்கள் ஆட்சியில் ரேசன் கார்டு பதிவு செய்த 5 நிமிடத்தில் தற்காலிக பதிவு சீட்டு வழங்கி அதை பயன்படுத்தி ரேசன் கடையில் உணவு பொருட்கள் பெறுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஹர்ஷகுப்தா போன்ற அதிகாரிகள் சிறப்பாக பணியாற்றியதால் மக்கள் பயன் அடைந்தனர். பிபிஎல் ரேசன் கார்டு வழங்குவதற்கு தடை இருக்கும் நிலையில் ஏபிஎல் ரேசன் கார்டு எதற்காக வழங்கப்படவில்லை? அரிசி உள்ளிட்ட உணவு தானியம் வழங்க தேவையில்லை என்ற நிலையில் ஏபிஎல் ரேசன் கார்டு எதற்காக வழங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன? விபத்தின் போது அடிபட்டவர்களை மருத்துவமனைக்கு சேர்க்கும் வகையில் ஹரீஷ் பெயரில் அமல்படுத்தப்பட்ட திட்டத்திற்கு மாநில  அரசு தடை போட்டுள்ளது. அரசின் சார்பில் ரூ.20 ஆயிரம் உடனடியாக விபத்தில் சிக்கியவர்களின் உயிரை காப்பாற்றுவதற்கு இது பயன்படுத்த நிலையில் எதற்காக இத்திட்டத்தை அரசு நிறுத்தியது என்பதற்கு முதல்வர் எடியூரப்பா விளக்கம் அளிக்க வேண்டும். இதுதவிர மங்களூரு மாவட்டத்திற்கு எவ்வித சிறப்பு திட்டமும் பட்ஜெட்டில் இல்லை. அதிலும் குறிப்பாக மீனவர்கள் நலனிற்கான திட்டம் எதுவும் இல்லை என்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. மீனவர்களுக்கு சலுகை விலையில் கிடைத்த மண்எண்ணெய் அளவு குறைக்கப்பட்டுள்ளதால் மீனவர்கள் கடலுக்கு சென்று திரும்பினால் ரூ.5 ஆயிரம் நஷ்டம் ஏற்படும் என்பதால் சிறிய மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்க்கிறார்கள். 2 ஏ இடஒதுக்கீடு விஷயத்தில் ஏற்கனவே இடஒதுக்கீடு பெற்ற சமுதாயம் பாதிக்காத வகையில் அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும், என்றார்….

The post ஏபிஎல் ரேசன் கார்டு வழங்க என்ன பிரச்னை? மாஜி அமைச்சர் யுடி காதர் கேள்வி appeared first on Dinakaran.

Tags : Former Minister ,UD Khader ,former ,minister ,UT Khader ,Dinakaran ,
× RELATED பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டு...